மக்கள் நல்லுறவு மையத்தில் வைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் வைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் ஆரத்தி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் பொதுமக்களிடமிருந்து 373 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசுத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய் துறை சார்பாக 21 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை மாவட்ட கலெக்டர் வழங்கியுள்ளார். பின்னர் கடந்த 21-ஆம் தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் அன்று பெறப்பட்ட மனுக்களில் ஒரு நபருக்கு மூன்று சக்கர வண்டியும், 3 நபருக்கு காது கேட்கும் கருவியும் வழங்கப்பட்டுள்ளது.