சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் அறிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அறிவானந்தம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் 8 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
அதன்பின் சிறுமியிடம் இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் அறிவானந்தத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.