Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. புள்ளி மானுக்கு நடந்த விபரீதம்…. வனத்துறையினரின் விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி பிரிவு சாலையை அதிகாலை நேரத்தில் புள்ளிமான் ஒன்று கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் புள்ளி மான் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 4 வயதுடைய புள்ளிமானின் உடலை மீட்டனர். அதன்பின் கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தபிறகு புள்ளிமானின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |