விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டிநல்லூர் கிராமத்தில் விவசாயியான சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி சேட்டு 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு வாலிபரின் சடலத்தை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.