தொழிலாளி கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குவாரியில் கல் உடைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி வேலை முடிந்த பிறகு அப்பகுதியில் இருக்கும் குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததால் பாண்டியின் முகத்தில் அடிபட்டது. இதனால் தண்ணீரின் மூழ்கி பாண்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.