Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மகன்..மகளின் உதவியுடன்….. கணவன் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி….. பரபரப்பு வாக்குமூலம்…!!

தர்மபுரியில் மகன் மகளின் உதவியுடன் மனைவியே கணவன் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவர் தர்மபுரியை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. நாள்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவி மகன் மகளுடன் போதையில் தங்கராசு சண்டையிடுவது வழக்கம். இதையடுத்து சம்பவத்தன்று மது அருந்திவிட்டு தனது மனைவி, மகன் மகளுடன் சண்டையிட்டு உள்ளார் தங்கராசு.

இதையடுத்து மறுநாள் காலையில் பேச்சு மூச்சின்றி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது மனைவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மர்மமான முறையில் தங்கராசு இறந்ததால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திடீர் திருப்பமாக பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை தங்கராசு மனைவி அளித்துள்ளார். அதில் சம்பவத்தன்று எனது கணவர் குடிபோதையில் வந்து தன்னிடம் தகராறு செய்ததாகவும், மேலும் குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்து அவரை கீழே தள்ளிவிட்டு எனது மகன் மகள்களின் உதவியுடன் கயிறால்அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார்  தங்கராசின் மனைவி வனிதா மற்றும் 18 வயதுக்குட்பட்ட அவரது மகன், மகள் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மகன் மகளின் உதவியுடன் மனைவியே கணவனின் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |