பசுமை ஹைட்ரஜன் கார் விரைவில் அறிமுகமாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நிதித்துறை அமைச்சர் நிதின் கட்காரி பார்லிமெண்ட் கூட்டத் தொடருக்கு ஹைட்ரஜன் காரில் சென்றுள்ளார். இவர் பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் இந்தியாவின் வளர்ச்சிக்காக தண்ணீரில் இருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் மூலமாக இயங்கும் காரை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன் முன்மாதிரியாகவே இந்த ஹைட்ரஜன் கார் தயாராகியுள்ளது.
இந்த ஹைட்ரஜன் கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலமாக புதிய வேலை வாய்ப்பு உருவாகும். இதற்காக அரசு 3,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான ஏற்றுமதி விரைவில் தொடங்கப்படும். மேலும் இந்தியாவில் நிலக்கரி தயாரிக்கும் இடங்களிலெல்லாம் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும் என கூறினார்.