துலாம் ராசி அன்பர்களே…! நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
நீண்டநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். தொழிலில் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையான விஷயம் அனைத்தும் நடக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் கை ஓங்கி இருக்கும். கடன் தொல்லை தீரும். இறைவழிபாடு இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். பணவரவு அதிகப்படியாக இருக்கும். மனதில் குழப்பம் நீங்கும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மீக ஸ்தலம் சென்று வரலாமா என்ற சிந்தனை இருக்கும். கற்பனை திறன் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும்.அலட்சியம் காட்டாமல் எந்த வேலையிலும் ஈடுபட வேண்டும். சுப காரியத்தில் தாமதம் இருக்கும்.
மாணவ செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விளையாட்டு துறையில் நல்ல வெற்றி வாய்ப்பு கிடைக்கும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாடு மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை தானமாக கொடுத்து உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு.
அதிர்ஷ்ட எண்-3 மட்டுமே 7.
அதிர்ஷ்ட நிறம் வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.