விருச்சிகம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத பண வரவிற்கு அடித்தளம் ஈட்டிக் கொள்வீர்கள்.
உறவினர் நண்பர் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொன்ன சொல்லை மதித்து நடப்பார்கள். அரசாங்கத்தின் அனுகூலமான சூழல் ஏற்படும். வழக்கில் சாதகமான தீர்ப்பு இருக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்யக்கூடும். மற்றவரை பொறாமைப் படும் படி நடத்துவீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும். தனவரவு இரட்டிப்பாக இருக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். பிரச்சனைகள் அனைத்தும் விலகி செல்லும். அவ்வப்போது தேவை இல்லாத முன் கோபம் ஏற்படும். கோபத்தை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். தொழில் வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். தொழில் ரீதியில் எடுக்கும் முயற்சி கவனமாக இருக்க வேண்டும். பழைய பாக்கி தாமதமாகும். சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வேலை செய்யுங்கள்.
காதலில் உள்ளவர்களுக்கு உன்னதமான தருணம் அமையும். மாணவக் கண்மணிகளுக்கு ம் கல்வியில் பிரச்சனை இல்லை.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 7.
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.