குரங்கு ஒன்று பெண்ணின் தலையில் பேன் பார்த்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதி மலைப்பிரதேசம் ஆகும். இங்கு குரங்குகள் வரவு அதிகரித்துள்ளது. இவை குடியிருப்புகளில் புகுந்து வீடுகளில் இருக்கும் உணவுப் பண்டங்களை நாசம் செய்து வருகிறது. இதில் சில குரங்குகள் பொதுமக்களிடம் இயல்பாக பழகி வருகிறது.
இந்நிலையில் கக்குளா கிராம பகுதியில் ஒரு பெண் வீதியில் நின்று கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் தோளில் மீது ஒரு குரங்குக்குட்டி அமர்ந்து கொண்டு தலையில் பேன் பார்த்துள்ளது. இதைப்பார்த்து ஆச்சரியமடைந்த சிலர் இந்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.