Categories
உலக செய்திகள்

ஏமனில் அமைதி நிலவுவதற்காக அதிரடி அறிவிப்பு… ஐ.நா. வரவேற்பு…!!!

ஏமனில் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரினை தற்காலிகமாக நிறுத்தி  வைத்துள்ளதாக சவுதி கூட்டுப்படைகள் அறிவித்துள்ளது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து  தனது பதவியை மன்சூர் ஹைதி ராஜினாமா செய்தார். தற்போது ஏமனின் அதிபராக அலி அப்துல்லா சாலே இருக்கிறார். கடந்த 7 வருடங்களாக நடக்கும், உள்நாட்டுப் போரில் இதுவரைக்கும்  1 லட்சத்துக்கும் அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஏமனில் தொடர்ந்து வரும் இப்போரினை தற்காலிகமாக நிறுத்தி  வைத்துள்ளதாக சவுதி கூட்டுப்படைகள் அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அரபுச் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதாவது,  இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் அரசியல் கட்சிகளுக்கு வளமான சூழலை உருவாக்கவும் மற்றும் அமைதிக்கான முயற்சிகளை தொடங்கும் நோக்கில் இந்த தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

மேலும் இந்தப் போராட்டமானது நேற்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து சவுதி கூட்டுப்படைகளின் இந்த முடிவினை ஐ.நா வரவேற்றுள்ளது. ஆனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதியின் இந்த முடிவினை ஏற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் ஏமனின் உள்நாட்டுப் போரானது,கடந்த வாரம் 8-ஆம் ஆண்டுக்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |