அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ராயபுரம் காவல் நிலையத்தில் இரண்டாவது நாளாக கையெழுத்திட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பொய் வழக்குகள் போட்டு அதிமுகவை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் பதவியிலிருந்து நீக்கப்படாமல் வேறு இலாகாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது அவருக்கு கிடைத்துள்ள பரிசு. இதனை தண்டனை என்று சொல்ல முடியாது. எதற்காக வெளிநாடு முதலீடுகள் ? என்றால் ‘மாலு மாலு சுரங்கனிக்காக மாலு’ என்ற பாடல் தான் நியாபகத்திற்கு வருகிறது. திமுகவின் குடும்ப ஆடிட்டர் எதற்காக முதல்வரின் வெளிநாடு பயணத்தில் உடன் சென்றிருந்தார் ? என்பதற்கான உரிய விளக்கத்தை மத்திய அரசு கேட்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.