Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. ஓராண்டுக்குள் கிராமம் தோறும் இணையவசதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழகத்தில் பாரத் நெட் 2ஆம் கட்ட திட்டம் (BharatNet Pase-II) செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET Corporation) சார்பில் கையெழுத்தானது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “பாரத் நெட் மூலம் ஏற்கனவே 2 பேக்கேஜ் Roll out செய்து பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரு பேக்கேஜ் சுமார் 509 கோடி மதிப்பில் Roll Out செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் நான்காவது பேக்கேஜ் விரைவில் Roll out செய்யப்படவுள்ளது. நேற்று Roll Out செய்யப்பட்ட ஒரு பேக்கேஜ் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, கிராமங்களில் ஓராண்டுக்குள் பணிகள் முடிவுக்கு வரும். இதனால் இணைய வசதிகள் சுமார் 12 ஆயிரத்து 525 கிராமங்களுக்கு கிடைக்க உள்ளது. தொடர்ந்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “இ-சேவை மையம் கடந்த பத்து வருடங்களாக வீழ்ச்சியில் இருந்தது.

இதையடுத்து புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 56 இ-சேவை வசதிகள் கூடுதலாக கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் இ-சேவை மையங்கள் எங்கெல்லாம் இல்லையோ அங்கு விரைவில் இ-சேவை மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இ-சேவையில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி செய்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டு முன்னுரிமை கொடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |