ஊழியர்களுக்கான பணிக்கொடையில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பணிக்கொடை என்பது பணிக்கொடைச் சட்டம் 1972ன் கீழ் ஊழியர்கள் பெறும் பலன் ஆகும். அதவாது ஒரு நிறுவனம் அல்லது முதலாளி தனது பணியாளரின் பணிக்கு ஈடாக தனது பணியாளருக்குச் செலுத்தும் சம்பளத்தின் ஒரு பகுதியை பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, நிறுவனத்தின் சார்பாக பணிக்கொடை வழங்கப்படுகிறது. சேவை ஆண்டு x கடந்த மாத சம்பளம் x 15/26 என்ற சூத்திரத்தின் அடிப்படையில் பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக, ஒரு ஊழியர் 30 ஆண்டுகள் பணிபுரிந்து, அவருடைய கடைசி சம்பளம் ரூ.30,000 என்றால், அவருக்கு 30x30000x15 / 26 = ரூ. 519,230.7692 பணிக்கொடை கிடைக்கும். அதாவது ரூ.5.19 லட்சம் வழங்கப்படும். இந்நிலையில் இந்த பணிக்கொடையில் (கிராசுட்டி ) எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இது குறித்து, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் எனவும் அதை 30 நாட்களாக உயர்த்துவதற்கான திட்டம் ஏதும் இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மாநிலங்களவையில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் ஊழியர்களிடையே 5 ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரியும் ஊழியர்களுக்கு, பணிக்கொடை கிடைக்குமா என்ற கேள்வியானது எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் ராமேஸ்வர் பதில் அளித்துள்ளதாவது, சமூக பாதுகாப்பு சட்டம் 2005 இன் படி ஒரு பணியாளரின் பணி நீக்கம் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு பணி நீக்கம் அல்லது இழப்பு அல்லது இயலாமை ஆகியவற்றின் காரணமாக பணிக்கொடையானது வழங்கப்படாமல் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.