எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமையல் போட்டியில் சத்தான உணவுகள் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் வைத்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல் போட்டி நடைபெற்றது. இதில் ஒன்றிய சேர்மன் விஜயகுமரன், துணை சேர்மன் வீரம்மாள் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, வட்டார வள திட்ட நிர்வாகி செல்வமணி, குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் பகவதி, மாணிக்கவல்லி, சமையலர், உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் அடுப்பு இல்லாமல் சிறுதானியங்களை பயன்படுத்தி சமைத்த சிறந்த உணவுகளை அதிகாரிகள் தேர்வு செய்தனர். இந்த போட்டியில் மூன்று சத்துணவு சமையலர் மற்றும் மூன்று உதவியாளர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் இருக்கும் சமையல் போட்டியில் கலந்து கொள்வார்கள் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.