காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில் பக்கத்தில் ராகுல் காந்தி, “தினமும் பிரதமர் என்ன செய்ய வேண்டும் ? என்ற பட்டியலில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி வெற்று கனவுகளை எப்படி காட்டுவது, மக்களின் செலவுகள் பற்றிய விவாதத்தை எப்படி நிறுத்துவது, கூடுதலான விவசாயிகளை எப்படி உதவியற்ற நிலைக்கு தள்ளுவது, எந்த பொதுத்துறை நிறுவனத்தை விற்க வேண்டும், டீசல், பெட்ரோல், எரிவாயு விலையை எவ்வளவு உயர்த்துவது ? என்பவை உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.