தெலுங்கான மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்திலுள்ள சிட்டபோயன்ன கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் சசிகாந்த் எனும் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். அவர் பணிக்கு சேர்ந்தது முதல் தினசரி குடித்துவிட்டு பள்ளிக்கு செல்வதும், மது போதையில் வகுப்பறையில் படுத்து உறங்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் சென்று ஆசிரியர் சசிகாந்த் தினசரி குடித்து விட்டு வந்து, பாடம் ஏதும் நடத்தாமல் உறங்குகிறார் என்று குற்றம் சாட்டினர். இதையடுத்து அப்பகுதி இளைஞர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்தபோது ஆசிரியர் சசிகாந்த மதுபோதையில் நாற்காலியில் படுத்து உறங்கிகொண்டிருந்தார்.
இந்நிலையில் அந்த இளைஞர் சசிகாந்தை தட்டி எழுப்பி கேள்வி கேட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் மதுபோதையில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் உறங்கிகொண்டிருந்த வீடியோ சமூகவலைதளைங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன்பின் போதை ஆசிரியரை பணி நீக்கம் செய்து வேரு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.