மராட்டிய மந்திரி ஆதித்ய தாக்கரே அம்மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “5 மாநில சட்டசபை தேர்தலும் முடிந்துவிட்டது, எரிபொருள் விலையும் உயர்ந்துவிட்டது. அடுத்த தேர்தல் வரை விலை குறைய காத்திருக்க வேண்டும். பெரும்பாலான கொரோனா கட்டுபாடுகள் மராட்டிய மாநிலத்தில் நீக்கப்பட்டுள்ளன. மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு உயராது என்ற நம்பிக்கை உள்ளது. கல்லூரிகளில் அரசியல் கூடாது. இருந்தாலும் தற்போது அதுதான் நடந்து வருகிறது.
மாணவர்களின் பழைய பாடத் திட்டத்தை மாற்றி புதிய விஷயங்களை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். நாங்கள் மராட்டிய மாநிலத்தின் வளர்ச்சிக்காக புதிய முயற்சிகளை எடுத்து வருகிறோம். யார் முன்பும் மராட்டியம் தலைகுனியாது. நம்முடைய பலம் நமது உழைப்பு மட்டுமே. டெல்லியில் அமர்ந்திருக்கும் மக்களிடம் இந்த சக்தியை காட்ட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.