Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் விபச்சாரம்…… 6 வடமாநில இளம்பெண்கள் மீட்பு….. புரோக்கர் கைது…..!!

கொடைக்கானலில் விபசார தொழிலில் வடமாநில இளம்பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானலில் சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா சென்ற இடத்தில் அப்சர்வேட்டரி பகுதியைச் சேர்ந்த மோகன் ராஜா என்பவர் தன்னிடம் குறைந்த வாடகையில் அறைகள் வசதி இருக்கிறது அதில் வடமாநில இளம்பெண்கள் இருக்கிறார்கள் பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது நண்பர்களை கூட்டிக்கொண்டு மோகன் ராஜாவுடன் சென்ற பிரேம்குமார் சம்பவ இடமான விபச்சாரம் நடத்தப்படும் விடுதிக்குச் சென்ற உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த மறுகணமே சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் மோகன் ராஜாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ஆறு வடமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதும், அதற்கு மோகன்ராஜாதான் புரோக்கர் என்பதும் தெரிய வந்ததையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மோகன்ராஜாவை காவல்துறையினர் கைது செய்வதைக் கண்டதும் அவரது கூட்டாளிகளான ஸ்டீபன் மற்றும் சுரேஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து மீட்கப்பட்ட 6 வடமாநில இளம்பெண்கள் திண்டுக்கல் மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட மோகன் ராஜா சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தப்பியோடிய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |