பள்ளி கட்டிடம் அகற்றப்பட்டதால் மாணவ -மாணவிகள் தனி பள்ளி கட்டிடம் அமைத்து தர வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பரளியில் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி உள்ளது. அப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 100க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் நான்குவழிச்சாலை பணிக்காக பள்ளியின் சில கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட்டதால் மாணவ -மாணவிகள் அனைவரும் ஒரே வகுப்பில் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சிரமம் அடைந்த மாணவ மாணவிகள் தங்களுக்கு தனி பள்ளி கட்டிடம் வேண்டும் என கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த தாசில்தார் சுகந்தி தலைமையில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்தப் பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு மாதத்தில் மாவட்ட அந்தப் பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு மாதத்தில் தனி பள்ளி கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர்.