இந்தியாவின் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற ஹர்நஸ் கவுர் சந்து, ஹிஜாப் விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹர்நஸ் கவுர் சந்துவிடம் ஹிஜாப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர்கூறியதாவது, “இது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். அதனால், இந்தியாவில் உள்ள இளம்பெண்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்பதையோ, அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றியோ பேச யாருக்கும் உரிமை இல்லை.
இந்த விவகாரத்தில் அரசியல் செய்பவர்கள் தவறு செய்கிறார்கள். ஒரு பெண்ணை வேறொரு நபர் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால், அவள் வெளியே வந்து பேச வேண்டும். அவள் ‘அவளுடைய’ விருப்பப்படி வாழட்டும். நாம் அனைவரும் வெவ்வேறு கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள். நாம் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து நடக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.