Categories
மாநில செய்திகள்

அம்பேத்கர் படம் வைத்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்….ஐகோர்ட் அதிரடி உத்தரவு ….!!!!

எஸ்பிஐ வங்கி ஊழியர் பணிநீக்கத்தை ரத்து செய்த தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து  ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை அடையாறு பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்தவர் கெளரிசங்கர். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு அலுவலக அறையில் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதாகவும், மற்றும் பணி நேரத்தில் அடிக்கடி வெளியில் சென்று வந்தது, சங்கத்தினருடன் வந்து அதிகாரிகளை மிரட்டியதுடன், வங்கியில் பிரச்சினை செய்தது பற்றிய குற்றசாட்டுகளில் கடந்த 2006 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வங்கி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய மத்திய தொழிலாளர்கள் தீர்ப்பாயம் கடந்த 2012 ஆம் ஆண்டு கௌரிசங்கருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது.  இதையடுத்து இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்து, வங்கியின் பணிநீக்கம் உத்தரவை உறுதி செய்து மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து கௌரிசங்கர் சார்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு கூறியுள்ளதாவது, மத்திய நீதித்துறையின் சுற்றரிக்கை படி, அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் அம்பேத்கரின் புகைப்படத்தை வைக்கலாம் என்று கூறியுள்ளதை சுட்டிக் காட்டினர். இதையடுத்து மத்திய தொழிலாளர் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, அவருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க, வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |