Categories
மாநில செய்திகள்

அவதூறு வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…. குஷியில் ஓபிஎஸ், ஈபிஎஸ்…..!!!!!

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்-க்கு எதிராக பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

அதிமுகவின் செய்தித்தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி கடந்த ஜூன் மாதம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில் கூறியிருந்த காரணம் தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அடிப்படையில் இருப்பதாகக் கூறி இருவரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |