ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த, தற்போது பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன் ஜாதி பெயரைச் சொல்லி தரக்குறைவாக திட்டியதை கண்டித்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது புகார் அளித்த முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனுக்கு அரசு பணி பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹல்தாரிடம், தமிழ்நாடு பாஜக பட்டியல் அணி தலைவர் பொன்.V. பாலகணபதி என்பவர் டெல்லியில் இன்று புகார் அளித்துள்ளார்.
அதன்படி முறையாக சம்மன் அனுப்பி அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய பரிந்துரைக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நியாயம் பெற்றுத்தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.