தீ குண்டத்தில் தவறி விழுந்து மின்வாரிய அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரப்பேட்டையில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி பாதிரிகுப்பத்தில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் முத்துக்குமார் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துக்குமார் தீ குண்டத்தில் தவறி விழுந்து வலியில் அலறி சத்தம் போட்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் முத்துக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.