சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள நெசப்பாக்கம் பகுதியில் 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் சிறுவன் பள்ளிக்கு அருகில் இருக்கும் மைதானத்தில் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து விளையாட செல்வது வழக்கம். அப்போது மணப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான கோபி கண்ணன் என்பவர் நான் உங்களுக்கு இலவசமாக தடகள பயிற்சி அளிக்கிறேன் என சிறுவர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து பெற்றோர் அனுமதியுடன் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் கோபி கண்ணனிடம் பயிற்சிக்கு சென்றுள்ளனர். அப்போது கோபிகண்ணன் சிறுவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கோபி கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.