கிணற்றுக்குள் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.