Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தம்பி என்ன விட்டு போயிட்டான்” மாணவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்திமுகை பகுதியில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமயா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுமயாவின் சகோதரர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த சுமையானது தம்பி இறந்த துக்கத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |