சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செஞ்சை சேக்கடி பகுதியில் சேகர் என்பவர் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சேகர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த சேகரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.