நாசா விண்வெளியின் வீரர் மார்க் வந்தே ஹெய் ஆவார். இவர் சென்ற 2021 ஏப்ரல் 9-ஆம் தேதி சர்வதேச விண்வெளிநிலையத்தில் பணி மேற்கொள்வதற்காக பூமியிலிருந்து புறப்பட்டார். அண்மையில் இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிகநாட்கள் (355 நாட்கள்) தங்கி இருந்து பணி மேற்கொண்ட வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக ஸ்காட் கெல்லி விண்வெளியில் தொடர்ச்சியாக 340 நாட்கள் தங்கி இருந்ததே பெரும் சாதனையாக திகழ்ந்தது.
இந்த நிலையில் 355 தினங்கள் தங்கி இருந்து சாதனை படைத்த அவர் கஜகஸ்தானில் ரஷ்ய விண்வெளிகாப்ஸ்யூலில் இன்று பூமிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அவர் பூமிக்கு திரும்பியதை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவருடன் அன்டன் ஷ்காப்லெரோவ் மற்றும் பியோட்ர் டுப்ரோவ் ஆகிய 2 ரஷ்ய விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்பினர். பூமிக்கு திரும்பிய இவர்கள் 3 பேரும் மீண்டும் தங்களது வழக்கமான பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.