Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட ஒழுங்கு நடவடிக்கை….. 30 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!!!

பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கையின் மூலமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 கார்களை காவல்துறையினர் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் ஒழுங்குப்பிரிவு காவல்துறையினர் வடசேரி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பேருந்து நிலையத்திற்குள் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மொத்தம் 30 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு 760 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை செலுத்திவிட்டு உரிய ஆவணங்களை காண்பித்தபிறகு மோட்டார் சைக்கிள்கள் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் கூறியதாவது, வடசேரி பேருந்து நிலையங்களில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு அனுமதி கிடையாது. இங்கு‌ அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதேப்போன்று சாலைகளில் அநாவசியமாக நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். மேலும் இந்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |