Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் மற்றும் சந்திரபோஸ் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் இணைந்து பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |