சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள் இருப்பு வரம்பு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி யார் எவ்வளவு வைத்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாம். சமையல் எண்ணெய் வித்துக்களை சில்லறை வணிகர்கள் 30 குவிண்டாலும், மொத்த வணிகர்கள் 500 குவிண்டாலும் இருப்பு வைக்கலாம். எண்ணெய் வித்துக்களை சில்லறை வணிகர்கள் 100 குவிண்டாலும், மொத்த வணிகர்கள் 2,000 குவிண்டாலும் இருப்பு வைக்கலாம்.
உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும் இருப்புக்கான உச்சவரம்பை அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி உள்ளது. இன்றுடன் முடிவடையவுள்ள உச்சவரம்பை நீட்டித்து உணவு- நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.