லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் கிராமத்தில் கௌதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மினி லாரியில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜானகிராம் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி ஓட்டுனர் பாண்டி துரை என்பவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் கௌதம் ஓட்டி சென்ற மினி லாரி முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கௌதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.