Categories
தேசிய செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்…. சுருண்டு விழுந்து இளைஞர் பலி….பெரும் பரபரப்பு…!!!!

வெயிலின் தாக்கத்தால் இளைஞரொருவர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் கோடைகாலம் தொடங்கியிருப்பதால், காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வட மராட்டிய பகுதியான விதர்பா, மரத்வாடா என்ற பகுதிகளில் வெப்ப அலை அதிக அளவில் இருப்பதால், பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில்  ஜல்காவை சேர்ந்த ஜித்தேந்திரா (வயது 27) என்பவர் நேற்று முன்தினம் பிற்பகலில் பண்ணையில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வரும் வழியில், திடீரென அவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை கண்ட மற்ற விவசாயிகள் அவரை மீட்டு அமல்னேர் கிராமப்புற மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளார்கள்.  மேலும் அவர் வெப்பத்தின் தாக்கத்தால் பலியானதாக  டாக்டர் ஆஷிஷ் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வருகின்ற நாட்களில் மராட்டியம் உட்பட நாட்டின் சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |