மீன் குழம்பை விட அதிகம் விருப்பபட்டு சாப்பிடக் கூடியது கருவாட்டு குழம்பு தான். அதிலும், கருவாட்டு குழம்பு வைத்து மறுநாள் உண்டால் அதன் ருசியே தனி. சுவையான கருவாட்டு குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம்.
கருவாடோட மருத்துவ குணங்கள் :
கருவாடு உடல் உஷ்ணத்தை குறைக்கும். பொதுவாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து உஷ்ணம் வெளியேற கருவாட்டை சாப்பிடுவார்கள்.
தேவையானவை :
கருவாடு – 200கிராம்
கத்தரிக்காய் – 1/4 கிலோ
உருளைக்கிழங்கு – 2
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 2
புளி – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி அளவு
மல்லி தூள் – 50 கிராம்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 4 பற்கள்
துருவிய தேங்காய் – 1/4 கப்
செய்முறை :
வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய் சேர்த்து வறுத்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதனை குளிர வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். அம்மியில் அரைத்தால் அதன் சுவைக் கூடும். இதனுடன் துருவிய தேங்காயையும் அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் நறுக்கிய கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வேகவிடவும்.
காய் வெந்ததும் உப்பு சேர்த்து மேலும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தபின் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி கொதிக்க விடவும். அதன் பின்னர் கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் ருசியான கிராமத்து கருவாட்டு குழம்பு தயார்..