உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 % குறைந்துள்ளது. இந்தியாவில் விடுபட்ட கொரோனா பாதிப்பு இறப்புகளை கணக்கில் கொண்டு வந்தது, அமெரிக்கா, சிலியில் கொரோனா இறப்பு வரையறையில் மாற்றங்களை செய்தது போன்றவற்றால் உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் 43 % அதிகரித்துள்ளது.
இதையடுத்து உலக அளவில் ஒரு வாரத்தில் 10 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் 45,000 பேர் தொற்றால் இறந்துள்ளனர். இது மார்ச் மாதம் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலான நிலவரம் ஆகும். இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.