Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”… இன்று(ஏப்ரல்.1) முதல் 14 எக்ஸ்பிரஸ் ரயில்கள்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, சென்னை எம்ஜிஆர் சென்டிரல்- ஜோலார்பேட்டை- எம்.ஜி.ஆர் சென்டிரல் (வண்டி எண்:16089/16090) ஏலகிரி எக்ஸ்பிரஸ், நிலாம்பூர்- கோட்டயம்- நிலாம்பூர் (16325/16326) எக்ஸ்பிரஸ், புனலூர்-குருவாயூர்-புனலூர் (16327-16328) எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி-மங்களூரு-கொச்சுவேலி (16355/16356) அந்தியோதயா எக்ஸ்பிரஸ், கண்ணூர்-கோவை-கண்ணூர் (16607/16608) எக்ஸ்பிரஸ், திருச்சி-பாலக்காடு- திருச்சி (16843/16844) எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- கோட்டயம் (16366) எக்ஸ்பிரஸ், மங்களூரு- கோழிக்கோடு (16610) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மே மாதம் 1ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் மீண்டும் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த ரயில்கள் அனைத்தும் மே 1ஆம் தேதிக்கு பதிலாக முன்பாகவே ஏப்ரல் 1 (இன்று) முதல் முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஆகவே மே மாதம் 1ம் தேதி வரை மேற்கண்ட ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிப்பதற்கு பயணிகள் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளுக்கான பணம் அனைத்தும் திருப்பி வழங்கப்படும். இது தொடர்பான தகவல்கள் அவரவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |