Categories
Uncategorized தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!!…. இன்று (ஏப்ரல் 1) முதல் அனுமதி…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

கொரோனா காரணமாக 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 20-ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கட்டுப்பாடுகளில் குறிப்பிட்ட அளவுக்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.. 1 (இன்று) முதல் சுப்பிரபாதம், அர்ச்சனை, தோ மாலை, அஷ்டதள பாத பத்ம ஆராதனை, திருப்பாவாடை, வஸ்திர அலங்காரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற கட்டண சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. அதேநேரம் தற்போது அந்த கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் பக்தர்கள் காணொளி வாயிலாக பங்கேற்கின்றனர்.

இந்த நடைமுறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். தற்போது ஆன்லைன் வாயிலாக நடைபெறும் கட்டண சேவைகளில் பங்கேற்க டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் ஏப்ரல் 1 (இன்று) முதல் நடைபெற உள்ள கட்டண சேவைகளில் நேரடியாக பங்கேற்க முடியாது. ஆனால் அவர்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டபடி சுமாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். உதயஅஸ்தமன சேவை, விம்சாட்டி வர்ஸ்ஸ, தர்ஷினி போன்ற கட்டண சேவைகளை முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் இன்று முதல் கட்டண சேவைகளில் நேரடியாக கலந்துகொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Categories

Tech |