சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செம்பியவரம்பல் அரசலாற்று பாலம் அருகில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் வந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் தினேஷ்குமார் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த தினேஷ்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த அரை கிலோ மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.