Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற பேராசிரியை…. வாலிபர்களின் வெறிச்செயல்… . போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து  சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லுரியில்  பேராசிரியரான பணிபுரியும்  கோமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கோமதி கல்லுரிக்கி செல்வதற்காக தஞ்சை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து  கொண்டிருந்தார். அப்போது கோமதியை  மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கோமதியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு  தப்பி ஓடிவிட்டனர்.

இதில் நிலை  தடுமாறிய கோமதி கீழே விழுந்து விட்டார். இந்த விபத்தில் காயமடைந்த கோமதியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோமதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை  தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |