நெதர்லாந்து அரசு தங்கள் நாட்டில் உள்ள ரஷ்ய உளவு அதிகாரிகளை வெளியேறுமாறு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக போர் தொடுத்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளன. மேலும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு தூதரக ரீதியில் அழுத்தம் கொடுக்கும் விதமாக நாட்டு அதிகாரிகளை வெளியேற்றியுள்ளன.
இந்த நிலையில் நெதர்லாந்து அரசு ரஷ்ய உளவு அதிகாரிகள் 17 பெயரை இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி வெளியேறுவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நெதர்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “அதில் நெதர்லாந்துகான ரஷ்ய தூதரிடம், தூதரக அதிகாரிகளாக அங்கீகரிக்கப்பட்ட ரஷ்ய உளவு அதிகாரிகள் 17 பேரை நாட்டை விட்டு வெளியேற்றுவது தொடர்பாக சம்மன் வழங்கப்பட்டது. இந்த முடிவு தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான உளவுத்துறை அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் ரஷ்யாவின் தற்போதைய நடவடிக்கைகள் அந்த உளவுத்துறை அதிகாரிகளின் இருப்பை விரும்பத்தக்கதாக மாற்றுகிறது” என்று தெரிவித்திருந்தது.