Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!… இன்று (ஏப்ரல்.1) முதல் மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளி…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கல்வி நிறுவனங்களில் நேரடி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஏப்ரல்1 (இன்று) முதல் ஆப்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ள நிலையில், அரைநாள் மட்டும் வேலை நாளாக பின்பற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அதன்படி ஆந்திராவில் இன்று முதல் அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்பட இருக்கிறது. பொதுவாக அந்த மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூன் 12 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருவது வழக்கம் ஆகும். ஆனால் சென்ற 2021-2022 கல்வியாண்டில் கொரோனா காரணமாக ஆகஸ்ட் 3-வது வாரத்தில் தான் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனால் பள்ளி வேலை நாட்கள் குறைந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட விடுமுறை நாட்கள் கழித்து பள்ளிகள் இயங்க அனுமதிக்கும் அடிப்படையில், குறைந்தபட்சம் 180 வேலை நாட்கள் இருக்கும் வகையில் காலண்டர் மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது.

எனினும் இதுவரை பாடத்திட்டம் முழுமையடையாததால் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து தினசரி அரைநாள் மட்டும் பள்ளிகளை தொடங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த வகுப்புகள் ஏப்ரல் கடைசி வரை தொடரும். அதனை தொடர்ந்து மே முதல் வாரத்தில் இருந்து கோடை விடுமுறை அறிவிக்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்வுகள் மேமாதம் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் தேர்வுப் பணிகளில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கல்வியாண்டில் ஜூலை முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஜூன் கடைசி வரை விடுமுறை நீட்டிக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |