Categories
Tech

ஒரே கல்லில் 2 மாங்கா…. பட்ஸ் ஏர் 3 இயர்போன்கள்…. ரியல்மி நிறுவனம் சூப்பர் அறிவிப்பு…..!!!!!

ரியல்மி நிறுவனமானது ரியல்மி பட்ஸ் ஏர் 3 இயர்போன்களை  வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த இயர்போனில்TUV Rheinland சான்றிதழ் வழங்கப்பட்ட நாய்ஸ் கண்ட்ரோல் வழங்கப்பட்டு உள்ளது. இது வெளிப்புற இரைச்சலை 42 db வரையிலும் குறைக்கும். அதுமட்டுமல்லாமல் இதில் 2 மைக்ரோபோன்கள், 10mm டயனமிக் பேஸ் பூஸ்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன்களை ஒரேநேரத்தில் 2 சாதனங்களில் இணைத்துக்கொள்ளலாம்.
மேலும் இந்த இயர்போனிலுள்ள IPX5 வியர்வை மற்றும் நீரினால் இயர்போன் பாதிக்கப்படாமல் காக்கிறது. அத்துடன் இந்த இயர்போன்களை ஒரு தடவை சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் வரை டோட்டல் பிளே பேக் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் வெறும் 10 நிமிடம் சார்ஜில் 100 நிமிடம் பிளே பேக் டைமும் வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்டில் டிராஸ்பரன்ஸி மோடும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ரியல்மி பட்ஸ் ஏர் 3 இயர்போனின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 5000-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |