Categories
உலக செய்திகள்

குறைந்த விலையில் கச்சா எண்ணெய்?…. இந்தியா-ரஷ்யா பேச்சுவார்த்தை…. வெளியான முக்கிய தகவல்….!!!!

கடந்த ஒரு மாத காலமாக உக்ரைன்-ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதேபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு பீப்பாய் 35 டாலர் வரை தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து ஆண்டுக்கு ஒன்றரை கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வழங்குவது குறித்து இருநாடுகளும் பேசி வருகின்றன. உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து ரஷ்யா மீது பல நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |