Categories
தேசிய செய்திகள்

இன்னும் 2 வருடங்களில்….. இதுவும் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும்…. நிதின் கட்கரி…..!!!!!

இந்தியாவில் இன்னும் 2 வருடங்களில் அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும், பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு நிகராக இருக்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி மக்களவையில் கூறினார். மக்களவை சபாநாயகரிடம் பாராளுமன்றம் வளாகத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதற்கு இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிதின் கட்கரி, அவ்வாறு சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவினால் எம்பிக்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் அவர் ஒவ்வொரு அரசு வளாகத்திலும் பார்க்கிங் அமைப்பில் மின்வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியை வழங்க விரும்புவதாக கூறினார். இதையடுத்து மாற்று எரிப்பொருள் தேசிய தலைநகர் டெல்லியின் மாசு அளவைக் குறைக்கும் என்று கூறிய அவர், இறக்குமதி மாற்று, குறைந்த செலவில் அதிகமான செயல்திறன், மாசு இல்லாத மற்றும் உள்நாட்டு உற்பத்தி போன்றவையே அரசின் கொள்கை என்று குறிப்பிட்டார்.
அத்துடன் நிதின் கட்கரி, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். ஏற்கனவே நான் நிலைமையைப் பார்த்திருக்கிறோம். ஆகவே இதுதான் ஒரே மாற்று  எரிபொருள் ஆகும். அதாவது கிரீன் ஹைட்ரஜன், மின்சாரம், எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ-எல்என்ஜி மற்றும் பயோ-சிஎன்ஜி ஆகும். அந்ததிசையில் நாம் செயல்படுவோம் என்று தெரிவித்தார்.

Categories

Tech |