Categories
மாநில செய்திகள்

ஒரு நிமிடம் மட்டுமே…. சோனியா காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

மூன்று நாள்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நாடாளுமன்றம் வருகை தந்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.

இவர்களுடைய சந்திப்பு ஒரு நிமிடம் மட்டுமே நடந்தது. பின்னர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சந்தித்து உரையாற்றினார். ஏப்ரல் 2ஆம் தேதி அன்று டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த அலுவலக திறப்பு விழாவிலும் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

Categories

Tech |