Categories
ஆட்டோ மொபைல்

இளைஞர்களே!…. ரூ.1.07 லட்சத்தில் யமஹா…. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!!!

2022ஆம் வருடத்துக்கான யமஹா ஃபோர்ஸ் எக்ஸ் ஸ்போர்டி ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஹெவி ட்யூட்டி டிசைன் வெளிப் பக்கத்தில் தரப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டூயல் டோன் பாடி பேனல்கள் இதற்கு ஸ்போர்ட்டினஸை தருகிறது. அத்துடன் இதில் முன்பக்கத்திலுள்ள அப்ரான் மவுண்ட் செய்யப்பட்ட ஹெட் லேம்ப், சிங்கிள் ஸ்டெப்ட் சீட், அலாய் வீல்கள் தரப்பட்டுள்ளது. இதனிடையில் ஹெட் லேம்பிற்கு கீழே தரப்பட்டு உள்ள பிரெண்ட்பீக் இந்தஸ்கூட்டருக்கு தனித்தன்மைமிக்க தோற்றத்தினை தரும்.
இவற்றில் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்கள் அனைத்தும் டிஜிட்டலைஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 125 சிசி ஏர் கூல்ட் இன்ஜின் தரப்பட்டுஉள்ளது. இது 6500rpm-ல் 8.9bhp பவரை தரக்கூடியது ஆகும். அதேபோன்று 5000rpm-ல் 9.7Nm பீக் டார்க்கையும் இந்த ஸ்கூட்டர் தரக்கூடியது ஆகும். இதன் டிரான்ஸ் மிஷனுக்காக சிவிடி கியர்பாக்ஸ் தரப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஸ்டாண்டர்ட் 10 இன்ச்வீல் முன் பக்கத்தில் பின் பக்கத்திலும் தரப்பட்டுள்ளது.
இதனிடையில் இதன் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம்யூனிட்டும் தரப்பட்டுள்ளது. அத்துடன் சஸ்பென்ஷனுக்காக இதில் ஃப்ரண்ட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் இடம்பெற்றுள்ளது. இந்த பைக் 92 கிலோ எடையுடையது. மேலும் 1 லிட்டருக்கு 45 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய எகானமியை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலையானது இந்திய மதிப்பில் ரூபாய்1.07 லட்சம் ஆகும். இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வெளியிடுவதற்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Categories

Tech |