பாகிஸ்தானில் எனது அரசுக்கு எதிராக வெளிநாட்டு சதி நடப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான விவாதம் நாளை நடைபெற உள்ளது. மேலும் தீர்மானத்தின் விவாதத்தை தொடர்ந்து வரும் 3ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இம்ரான் கான் தனது அரசாங்கத்தை கவிழ்க்க வெளிநாட்டு சதி செய்வதை நிரூபிக்கும் ‘அச்சுறுத்தல் கடிதம்’ தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இம்ரான் கான் கடிதத்தை எடுத்து மக்களை நோக்கி காட்டினார். மேலும் இது எனது அரசாங்கத்தை கவிதைக்கும் ஒரு சர்வதேச சதி தீட்டப்பட்டு அதற்கான ஆதாரம். வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. அரசாங்கத்தை மாற்றுவதற்காக வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டில் உள்ளவர்கள் வெளிநாட்டிலிருந்து பயன்படுத்துகின்றனர். அவர்களில் சிலர் தங்களை பயன்படுத்துவது தெரியாமல் வேண்டுமென்றே இந்த பணத்தை எங்களுக்கு எதிராக உபயோகின்றனர். ஆனால் இந்த கடிதம் பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜித் கான் அமெரிக்காவுக்காக அனுப்பிய தூதரக ரீதியிலான கடிதம். மேலும் அந்த கடிதத்தில் அமெரிக்க அதிகாரிகள் நேரடி மேற்கோள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது” என்று கூரியுள்ளர்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அமைச்சரவையின் உயர் அதிகாரம் கொண்ட தேசிய பாதுகாப்பு குழுவிடம் ஏன் அத்தகைய கடிதம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதற்கு இம்ரான் கான் இன்று கடிதத்தை தனது நெருங்கிய அரசியல் கூட்டாளிகள் மற்றும் முக்கிய செய்தியாளர்களிடம் காண்பிக்க போவதாக கூறினார். அதே போலவே அனைவரின் முன்னிலையிலும் தனது அரசுக்கு எதிரான வெளிநாட்டுச் சதிக்கான ஆதாரங்களைக் கொண்டதாகக் கூறப்படும் கடிதத்தை காட்டினர்.