Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநங்கைகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

உலக திருநங்கையர் தினத்தில் 4 வகையான முயற்சிகள் எடுத்து அவர்களுக்கான பரிசாக கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு தலைமையில் உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கான வங்கி உதவித்தொகை, அரசு பதிவிதழில் பெயர் மாற்றம், மருத்துவ காப்பீடு திட்டம், மானியத்துடன் கூடிய தொழில் கடன் போன்ற உதவிகள் 70 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளதாவது, நீண்ட கால திட்டமொன்றை திருநங்கைகளுக்கு செயல்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும் என திட்டமிட்டு, உலக திருநங்கையர் தினத்தில் அவர்களுக்கான பரிசாக 4 வகையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  •  தற்போது நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம், மீனவர்கள் குறைதீர் கூட்டம், ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் என்பதைப் போல் நெல்லை மாவட்டத்தில் திருநங்கைகள் குறைதீர் கூட்டமானது 3 மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து, கலெக்டரின் தலைமையில் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
  • இத்திட்டமானது வருகிற மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும்அந்தக்  குறைதீர் கூட்டத்தில் காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று, திருநங்கைகளுக்கான கோரிக்கைகள் மற்றும் குறைகளை தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மேலும் படித்த திருநங்கைகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் போட்டி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி மையமானது மே மாதம் முதல் தொடங்கி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
  • திருநங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் உயர்கல்வி படிக்கும் திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். இந்த திட்டங்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்ததற்கு திருநங்கைகள் கரம் தட்டி தங்கள்  மகிழ்ச்சியை  தெரிவித்தனர்.

 

Categories

Tech |